🚀 Free Tamil Tools + Latest News + Tech Updates – All in One Platform!

ஹார்முஸ் நீரிணை வழியாக 47,000 டன் LPG – இந்தியா வந்தடைந்த கப்பல்

👁️ 4 Views   |   ⭐ 0 (0 Reviews)
ஹார்முஸ் நீரிணை வழியாக 47,000 டன் LPG – இந்தியா வந்தடைந்த கப்பல்

புதுடெல்லி,

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போரால் மேற்கு ஆசிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக, இந்தியாவில் எரிசக்தி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், சுமார் 47 ஆயிரம் டன் எல்.பி.ஜி. எரிவாயுவை ஏற்றிக்கொண்டு 'ஜாக் வசந்த்' என்ற இந்திய கப்பல் குவைத்தில் இருந்து இந்தியா நோக்கி புறப்பட்டது. வழியில் ஈரான் ராணுவத்தின் நேரடி கண்காணிப் பில் உள்ள, ஆபத்தான ஹார்முஸ் நீரிணை வழியாக இந்த கப்பல் வரவேண்டி இருந்தது.

போர் பதற்றம் காரணமாக எந்த நேரத்திலும் தாக்குதல் நடக்கலாம் என்ற அச்சத்திலும், இந்திய மாலுமிகள் சாமர்த்தியமாக செயல்பட்டு கப்பலை குஜராத் துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு 17 ஆயிரத்து 100 டன் எல்.பி.ஜி.யை இறக்கிய பின்னர் அந்த கப்பல் மும்பை துறைமுகம் வந்து சேர்ந்தது.

அந்த கப்பலில் இருந்து எல்.பி.ஜி.யை மற்றொரு சேமிப்பு கப்பலுக்கு மாற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெற்றது. எங்கள் உயிருக்கே ஆபத்தான சூழல் இருந்தாலும், நாட்டுக்காக எரிவாயுவை கொண்டு வந்ததில் பெருமைப்படுகிறோம் என அதில் பணியாற்றிய மாலுமிகள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

 

📲 Follow Us for Daily Updates

Latest news, updates & useful tools – உடனுக்குடன் பெற எங்களை பின்தொடருங்கள் 👇


Useful Free Online Tools


💬 Comments

No comments yet.